எரிசக்தி நெருக்கடி! அமைச்சர்கள் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தங்களின் எரிபொருள் ஒதுக்கீட்டை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக தாங்களாகவே முன்வந்து குறைத்துள்ளனர் என அரச நிர்வாகம், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிசக்தி நெருக்கடியின் காரணமாக நாட்டிற்கும் மக்களுக்கும் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதற்காக, அனைத்து அமைச்சர்களும் ஒரு பொதுவான உடன்பாட்டிற்கு வந்து இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் ஒதுக்கீடு கணிசமாக குறைப்பு
இந்த முடிவினையடுத்து அமைச்சக செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் தங்களின் எரிபொருள் ஒதுக்கீட்டைக் கணிசமான அளவில் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் நிலவும் வறண்ட வானிலையை எதிர்கொண்டு, அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் நாட்டின் குடிமக்கள் அனைவரும் பொறுப்புடன் தண்ணீர் மற்றும் மின்சாரத்தைச் சேமிக்க பங்களிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அரச மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களும் நீரையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டிய அவசியம் குறித்தும் ஆலாசிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களில் தேவையற்ற விளக்குகளை அணைப்பதும், மின்தூக்கிகளின் பயன்பாட்டை முடிந்தவரை குறைப்பதும், விலையுயர்ந்த விளம்பரப் பலகைகளைக் கட்டுப்படுத்தி இரவு 9 மணிக்கு மேல் அவற்றை அணைத்து வைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri