அமைச்சர்கள் - எம்.பிக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவித்தல்- செய்திகளின் தொகுப்பு
அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு, மருந்து ஏற்றப்படுவதால் நோயாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் மற்றும் மருத்துவர்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காரணமாக சுகாதாரத்துறை பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. இவ்வாறான நிலமைக்கு சுகாதார அமைச்சரே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
அந்த வகையில் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேணையை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இவ்வாறு கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் தீவிர கவனம் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |