பெப்ரவரியில் ஜோன்ஸ்டன் உட்பட 8 பேருக்கு அமைச்சு பதவிகள்
அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இதன் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பொறுப்புக்கள் வழங்கப்பட உள்ளன.
பொதுஜன பெரமுனவின் 6 பேருக்கு அமைச்சு பொறுப்புக்கள்
பொதுஜன பெரமுனவை சேர்ந்த எஸ்.எம்.சந்திரசேன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே, எஸ்.பி.திஸாநாயக்க, சீ.பி.ரத்நாயக்க ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
வஜிர மற்றும் துமிந்தவுக்கும் அமைச்சு பதவிகள்
இதனை தவிர ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
இதற்கு முன்னதாக கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.


மீண்டும் பதின்மூன்றா....! 19 மணி நேரம் முன்

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan

தொகுப்பாளினி டிடியின் மறுமணம் பற்றி முதன்முறையாக கூறிய அவரது அக்கா பிரியதர்ஷினி- என்ன கூறினார் தெரியுமா? Cineulagam
