போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட அமைச்சர் : கண்டனம் வெளியிட்டுள்ள மக்கள்
பொன்னாவெளி சுண்ணக்கல் போராட்டம் 270ஆவது நாளாக தொடர்கின்ற நிலையில் போராட்ட குழுவுடனும் மக்களுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) கலந்துரையாடாமல் சுண்ணக்கல் அகழ்வுக்கு அனுமதியை கொடுத்ததோடு வன்முறையையும் கையாண்டமை கண்டிக்கத்தக்கது என அனைத்து மக்கள் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரால் நேற்று (05) பொது மக்களுக்கு நிகழ்ந்த வன்முறை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தை நாம் நிகழ்த்தும் போது அமைச்சர் டக்ளஸ் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலிருந்து மக்களை வரவழைத்து எமக்கு எதிராக அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஏந்திய சுலோகங்களை கிழித்து, வாக்களித்த மக்களுக்கே அமைச்சர் வன்முறையை கையாண்டுள்ளார்.
பொன்னாவெளி கிராமத்திலே நாம் நன்னீர் எடுத்த ஒரு வரலாறு உண்டு. ஆனால் சில தனியார் நிறுவனங்கள் ஆய்வினை மேற்கொண்டு இப்பொழுது உவர் நீராக எமது நீர்வளம் மாறியுள்ளது.
இந்த விடயத்திலே ஐந்து கிராமங்கள் தொடர்புபட்டுள்ளது. இந்நிலையில் இங்கு வயற்காணிகள், கால்நடைகள். கடல் வளங்கள் என அனைத்தும் உள்ளது. எமது மக்கள் இவை அனைத்தையும் நம்பியே தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri