துப்பாக்கிச்சூட்டு சம்பவம்! - அமைச்சர் வியாழேந்திரனின் உருவ படங்கள் எரிப்பு
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு முன்பாக மக்கள் பாரிய எதிர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் உருவப் படங்களை எரித்து பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக இன்று மாலை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது டிப்பர் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அப்பகுதியில் பெருமளவானோர் ஒன்றுகூடி துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு எதிராக கண்டனம் வெளியிட்டுள்ள நிலையில் அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் உருவப் படங்களை எரித்து பிரதேச மக்கள் எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri