பிரித்தானிய பிரதமருக்கு எதிராகத் திரும்பிய அமைச்சர்கள் - நாடாளுமன்றில் நாளை மன்னர் சார்லஸின் உரை
பிரித்தானிய உள்ளூர் தேர்தலில் தொழிற்கட்சி மண்ணைக் கவ்விய நிலையில், பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு அலை வீசுகிறது.
"நீங்கள் நல்லவர், ஆனால் நாட்டை வழிநடத்த இது போதாது" எனக் கூறி அதிரடியாகப் பதவி விலகியுள்ளார் அமைச்சர் ஜெஸ் பிலிப்ஸ். இவருக்கு முன்னதாக மியாட்டா ஃபான்புல்லே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய அரசியல்
சுமார் 80 எம்.பி.க்கள் "பதவியை விடுங்கள்" என முழக்கமிட்டாலும், ஸ்டார்மர் எதற்கும் அசராமல் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவைக்குள்ளேயே பிரதமர் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங், பிரதமரைத் தூக்கியெறிய 'சதி' (Coup) செய்வதாக முன்னாள் நிழல் நிதி அமைச்சர் ஜான் மெக்டோனல் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
டவுனிங் வீதியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் வெளியே வந்த அமைச்சர்களின் முகத்தில் தெரிந்த இறுக்கம், கட்சி எந்த நேரத்திலும் உடையலாம் என்பதையே உணர்த்துகிறது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில், நாளை மன்னர் சார்லஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.
சார்லஸின் உரை
இது ஒருபுறம் அரசின் திட்டங்களை அறிவிக்கும் நிகழ்வாக இருந்தாலும், மறுபுறம் ஸ்டார்மரின் அரசியல் வாழ்வைத் தீர்மானிக்கும் 'வாழ்வா - சாவா' போராட்டமாகவே பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைச் செலவு உயர்வு, உருக்குத் துறை தேசியமயமாக்கல் போன்ற முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம். தொழிற்கட்சியின் கோட்டைகளைத் தகர்த்து வரும் 'ரிஃபார்ம் யூகே' (Reform UK) கட்சியின் அசுர வளர்ச்சி, ஸ்டார்மருக்குப் பின்னால் இருந்து குத்தும் முள்ளாக மாறியுள்ளது.
2029 பொதுத்தேர்தலுக்கு முன்பே தொழிற்கட்சி நிலைகுலைந்து போகுமா அல்லது ஸ்டார்மர் இந்தச் சூறாவளியைச் சமாளிப்பாரா என்பதே இப்போதைய உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam