யாழ். மக்களுக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வு
வீடமைப்பு அமைச்சினால் யாழ்ப்பாணத்திலுள்ள மக்களுக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது.
வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்ஹவால் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 19 பேருக்கு வீட்டு உறுதிகள் வழங்கப்பட்டன.
குறித்த வீடுகள் அனைத்தும் யுத்தத்திற்கு முன்னர் 1983 ஆம் ஆண்டு வீடமைப்பு அமைச்சினால் வீடற்ற மக்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் அவர்களுக்கான உறுத்ப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்களின் பரீட்சைகளில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு அமைச்சரால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அரசாங்கத்தின் திட்டங்களின் ஊடாக வீடற்ற அனைவருக்கும் வீடுகளை வழங்க உத்தேசித்துள்ளோம்.
தற்போது குறைந்தது ஒரு கிராம சேவையாளர் பிரிவில் ஒருவருக்காவது வீட்டினை வழங்குவோம். என்றார். இதன்போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதிலளித்தார்.






