முல்லைத்தீவு புதுவருட நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
முல்லைத்தீவில் (Mullaitivu) தமிழ் சிங்கள புத்தாண்டை (Sinhala and Tamil New Year) முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வன்னிப் படைத்தலைமையகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இணைந்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளன.
குறித்த நிகழ்வானது இன்று (07.04.2024) முல்லைத்தீவு மாவட்டம், மாமூலை டைமன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் (Pramitha Bandara Tennakoon) கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
பண்பாட்டு விழுமியங்கள்
இந்த நிகழ்வில் சித்திரைப் புத்தாண்டின் பண்பாட்டு விழுமியங்களை மாதிரி வடிவில் உருவாக்கியிருந்துள்ளதுடன் ஆற்றுகையினையும் நிகழ்த்தியுள்ளனர்.
விளையாட்டு நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெயகாந், வன்னி படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் தினேஸ் நாணயக்கார, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், 59ஆவது மற்றும் 64ஆவது படையணியின் தளபதி, மதகுருமார்கள், இராணுவ அதிகாரிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
மேலும், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்ததை பேணும் நோக்கில் இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயின் (Vikum Liyanage)வழிப்படுத்தலில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |