பிள்ளையை குறிவைத்து அவதூறு பிரசாரம்: சிஐடியை நாடும் அமைச்சர்
தனது பிள்ளையை குறிவைத்து பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் பரப்புரைகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்போவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவொன்றின் ஊடாக அமைச்சர் இதனை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு
“எனது பாடசாலை செல்லும் பிள்ளையை குறிவைத்து அரசியல் நோக்கங்களுக்காக பரப்பப்படும் தீங்கிழைக்கும் அவதூறு பிரசாரத்திற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் கணினி குற்றப்புலனாய்வுப்பிரிவில் முறைப்பாடு செய்யப்போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலையில் அமைச்சரின் மகன் ஈ-சிகரெட்டை நான்கு மாணவர்களுடன் சேர்ந்து பயன்படுத்தியுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




