பதவி விலக தயாராகும் மற்றுமொரு அமைச்சர்?
வனஜீவராசிகள் அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க பதவி விலக ஆயத்தமாகி வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்த அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பில் சீ.பி. ரட்நாயக்க கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் சீ.பி. தனது அமைச்சின் பொருட்களைக் கூட எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் தமக்கு வழங்கப்பட்ட அமைச்சின் ஊடாக எதனையும் செய்ய முடியாதிருந்த அமைச்சர், புதிய அமைச்சரவை மாற்றத்தில் வேலை செய்யக்கூடிய அமைச்சுப் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், நுவரெலியா மாவட்டத்தின் சக நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு நல்ல அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமையினால் சீ.பி. ரட்நாயக்க கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
இதன்படி, அநேகமாக அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க இன்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தெற்கு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.





ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri
