அமைச்சர் பிரசன்ன ரணதுங்க காணியை கொள்ளையிட்டார்: குற்றம் சுமத்தும் பெண்
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, காணி ஒன்றை மோசடி செய்துள்ளதாக தலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்த ரஜீவி டி சில்வா என்ற பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சர் காணியை கொள்ளையிட்டுள்ளதாகவும் அதனை நிரூபிக்கக் கூடிய சகல ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
தலவத்துகொட பெரேரா மாவத்தையில் உள்ள காணி ஒன்றை போலி ஆவணத்தை தயார் செய்து, அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மனைவி மொரின் ரணதுங்கவின் பெயருக்கு மாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் உட்பட சம்பந்தப்பட்ட துறைகளிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு நாடு- ஒரு சட்டம் என்றால், சாதாரண மக்கள் முதல் அமைச்சர் வரை அனைவருக்கும் சட்டம் பொதுவானதாக இருக்க வேண்டும் எனவும் ரஜீவி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை நாடுகளில் இரட்டை குடியுரிமை கொண்டுள்ள இந்த பெண், சமூக வலையொளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இதனை கூறியுள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக மேற்கொண்டுள்ள அவதூறுக்காக 50 கோடி ரூபாய் இழப்பீட்டை 14 நாட்களுக்கு செலுத்த வேண்டும் என அறிவித்து, அமைச்சரின் சட்டத்தரணிகள் அந்த பெண்ணுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இழப்பீட்டை செலுத்த தவறினால், வழக்கு தொடரப்படும் எனவும் சட்டத்தரணிகள் கடிதத்தில் கூறியுள்ளனர்.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
