இன்றைய மோசமான நிலைக்கு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியே காரணம்! பகிரங்க குற்றச்சாட்டு
அரச மருத்துவ அதிகாரிகளின் சம்மேளத்தின் பணிப்புறக்கணிப்பு தோல்வியடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ருக்ஸான் பெலன்ன தெரிவித்துள்ளார்.
நான்கு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தினர் நடத்திய போராட்டத்தின்போது அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல, தமது நிலைப்பாட்டில் இருந்து விட்டுக்கொடுக்கவில்லை.
இதன் காரணமாக சுகாதார அமைச்சின் செயலாளரிடம் இருந்து வெறுமனே கடிதம் ஒன்றை பெற்றுக்கொண்டு பணிப்புறக்கணிப்பை, அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளத்தினர் விலக்கிக்கொண்டதாக பெலன்ன குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராட்சியின் பயனற்ற நிர்வாகம் காரணமாகவே சுகாதாரத்துறை இன்று மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுற்றறிக்கையின்படி பொதுமக்கள் பாதிக்கப்படும்போது அந்த இடத்தில் சென்று செய்திகளை சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதனை வைத்தியசாலைகளின் நிர்வாகங்கள் நடைமுறைப்படுத்துவதில்லை.
எனவே எதிர்காலத்தில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளும்போது நோயாளிகள் சிகிச்சைப் பெறும் இடங்களுக்கு சென்று ஊடகவியலாளர்கள், நிலைமைகளை அறிக்கையிடவேண்டும் என்றும் ருக்ஸான் பெலன்ன கோரிக்கை விடுத்தார்.

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
