மின்வலு எரிசக்தி அமைச்சர் கட்டாருக்கு விஜயம்
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கட்டாருக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கையில் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டார் மன்னர் சேக் தமீம் பின் ஹமாட் அல் தானி அண்மையில் இலங்கைப் பிரதிநிதிகளை அந்நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரியிருந்தார்.

கட்டாரில் பணியாற்றி வரும் இலங்கையர்கள் தொடர்பில் கவனம்
கட்டாரில் பணியாற்றி வரும் இலங்கையர்களின் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த விஜயத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
இன்றைய தினம் அமைச்சர் காஞ்சன உள்ளிட்டவர்கள் கட்டாருக்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளனர்.
இதேவேளை, எரிபொருள் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குவைட் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளுக்கும் இலங்கையின் உயர் மட்ட பிரதிநிதிகள் விஜயம் செய்ய உள்ளனர்.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan