பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் நீதியமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்-செய்திகளின் தொகுப்பு
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களை அரசியல் தேவைப்பாடுகளின் அடிப்படையிலோ அல்லது பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலோ பொலிஸாரால் தடுத்து வைப்பதற்குக் காணப்படும் அதிகாரம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் இல்லாதொழிக்கப்படுமென நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதன்படி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தின் முழுமையான மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுவதுடன் அப்புதிய சட்டத்தின்கீழ் பொலிஸாரோ அல்லது வேறு தரப்பினரோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும், சந்தேகநபர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் உத்தரவாதமளித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan