ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோசிமாசா ஹயாசி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் டோக்கியோவில் இருந்து கொழும்புக்கு அமைச்சர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம்
கடந்த மே மாத இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டோக்கியோவிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனையடுத்து ஜப்பானிய அரசாங்கம், இணைத் தலைமை தாங்கும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பின் புதிய வழிகள் குறித்து ஜப்பானில் அமைச்சர் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
