அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியாதவை! சட்டத்தரணி ஜானக அதிகாரி தெரிவிப்பு
மூன்று ஜனாதிபதிகள் ஆட்சி நடத்திய சந்தர்ப்பங்களில் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஏன் குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் முன்னிலை உறுப்பினரான சட்டத்தரணி ஜானக அதிகாரி தனது சமூக வலைத்தளத்தில் இவ்வாறு குறிப்பொன்றை இட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,என்பிபி அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இத்தகைய செயல்பாடுகளிலேயே தங்கியுள்ளது.
சிதைந்து போயுள்ள எதிர்க்கட்சிகள் என்ன கூறினாலும் இலங்கைச் சமூகத்தை சரியான பாதைக்கு இட்டுச் செல்வது இவ்வாறான செயற்பாடுகளாகும்.
அவரின் வாதத்தின் அடிப்படை என்ன?
இந்தச் சம்பவம் 2014 ஆம் ஆண்டுக்குரியது. அப்போதைய உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராக இருந்த ஜயகொடி மீது உர நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக 2015 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
2015 இல் ரணில் பிரதமர் - மைத்திரிபால ஜனாதிபதி. 2019 இல் கோட்டாபய ஜனாதிபதி. 2022 இல் ரணில் ஜனாதிபதி. இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜயகொடி எதிர்க்கட்சியிலேயே இருந்தார்.
அவர் தொடர்ந்து ஜே.வி.பி-யின் ஆதரவாளராகவும் என்பிபியின் உயர்மட்ட உறுப்பினராகவும் செயற்பட்டு வந்தார்.

ஆனால் மேற்கூறிய ஜனாதிபதிகள் அல்லது பிரதமர்கள் எவரின் கீழும் ஜயகொடிக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
என்பிபி அரசாங்கத்தின் சக்திவாய்ந்த எரிசக்தி அமைச்சுப் பதவி ஜயகொடிக்கு வழங்கப்பட்டது.
ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருட காலத்திற்குள் என்பிபி அரசாங்கத்தின் மிக சக்திவாய்ந்த அமைச்சர்களில் ஒருவருக்கு எதிராக 2014 இல் நடந்த ஒரு சம்பவத்திற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நடவடிக்கை
இந்த நடவடிக்கையைச் செய்ய வேண்டாம் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு எவரும் அழுத்தம் கொடுக்கவில்லை.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜே.வி.பி-யின் சட்டக் குழுவில் இருந்தவர் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
அப்படியென்றால் ஜே.வி.பி-க்குத் தேவையானவாறு காய்நகர்த்த பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்கவைப் பயன்படுத்தியிருக்கலாம்.
ஆனால் அமைச்சருக்கு எதிரான நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த ரங்க திஸாநாயக்க முனையவில்லை. அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.
அதனைச் செய்வது ஜே.வி.பி சட்டக் குழு உறுப்பினராக இருந்த ரங்க திஸாநாயக்கவே ஆகும். இனி இந்த அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு அல்லது வெளிப்படைத்தன்மை பற்றிப் பேச எதிர்க்கட்சிக்கு வேறு என்ன மிச்சமிருக்கிறது?
2014 முதல் ஏனையவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இந்த வழக்கின் விபரங்களை நான் அறிந்திருப்பதால் ஜயகொடிக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது என்பது எனது நம்பிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 14 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri