கோட்டாபய கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு வரவேண்டாம்! அமைச்சருக்கு சென்ற பகிரங்க அறிவித்தல்
அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசளை பிரச்சினையால் விவசாயிகள் அமைச்சர் மீது கடும் எதிர்ப்பை கொண்டுள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
ஜனாதிபதி இருக்கும் மேடையில் கமத்தொழில் அமைச்சருக்கு எதிராக ஹூ சத்தமிட்டு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டால், அது அந்தளவுக்கு பொருத்தமாக இருக்காது என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் பிரதான பேச்சாளர்களில் ஒருவரான மகிந்தானந்த அளுத்கமகே இம்முறை சல்காது மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை.
எவ்வாறாயினும் கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் பசளை பிரச்சினையை எழுப்பி, தமது இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரியதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
