யுத்தம் நாளைக்கே முடிவுக்கு வந்தாலும் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் ஒரே இரவில் நீங்கிவிடாது! நளிந்த
மத்திய கிழக்குப் போர் நாளைக்கே முடிவுக்கு வந்தாலும், எண்ணெய் உற்பத்தி உட்கட்டமைப்புகள் மீது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் ஒரே இரவில் நீங்கிவிடாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து நேற்று (23.03.2026) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நெருக்கடி நிலை தணியும் வரை மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்குமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
நிவாரணம் வழங்க நடவடிக்கை
எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஏனைய பொருள்களின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படும் துறைகளைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு நிதி அமைச்சு தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சார விநியோகத்தைத் துண்டிக்கும் எண்ணம் தற்போது அரசுக்கு இல்லை என்று கூறிய அவர், விலைகள் அதிகரித்த போதிலும் மின்சாரம் மற்றும் எரிபொருளைத் தடையின்றி வழங்குவதே அரசின் பிரதான நோக்கம் என்றார்.
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam