நோர்வே, நெதர்லாந்து மற்றும் இலங்கை தூதுவர்களுடன் இராஜாங்க அமைச்சர் சந்திப்பு
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S. Viyalendiran) மற்றும் நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ட்ரைன் ஜரான்லி எஸ்கெடல் (Ambassador Trine Joranli Eskedal ) மற்றும் நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் (Tanja Gonfgrijp) ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது மட்டக்களப்பில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சரின் காரியாலயத்தில் இன்று காலை 09 .00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் கல்வி பொருளாதார மற்றும் சுகாதார அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பொருளாதார அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக முதலீடுகளை மேற்கொள்ளுமாறு நோர்வே மற்றும் நெதர்லாந்து நாட்டு தூதுவர்களிடம் இராஜாங்க அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கோவிட் - 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இரு தரப்பு சந்திப்பின்போது இராஜாங்க அமைச்சர் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.









அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri