தயாசிறியிடம் சவால் விட்டு மூக்குடைபட்ட பிரதியமைச்சர் மகிந்த
பிரதியமைச்சர் மகிந்த ஜயசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் சவால் விட்டு மூக்குடைபட்டுள்ளார்.
நேற்றைய (24.09.2025) நாடாளுமன்ற அமர்வில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிடியாணையின் பிரதி
அமைச்சர்களான வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் மகிந்த ஜயசிங்க மற்றும் கடுவெல நகராதிபதி ரஞ்சன் ஜயலால் ஆகியோருக்கு எதிராக கல்கிசை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்ப்பிக்கப்பட்டுள்ள போதும், பொலிசார் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் பிரஸ்தாபித்துள்ளனர்.
இதன்போது குறுக்கிட்ட பிரதியமைச்சர் மகிந்த ஜயசிங்க அவ்வாறான ஒரு பிடியாணை பிறப்பிக்கப்படவே இல்லை என்றும் அதனை நிரூபிக்க முடியுமா என்றும் சவால் விட்டார்.
அதனையடுத்து ஒரு சில நிமிடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, குறித்த பிடியாணையின் பிரதியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
.அதன்போது மகிந்த ஜயசிங்க எதுவித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



