பதவி விலகலை தயக்கமின்றி ஏற்கவும்: மின்சக்தி அமைச்சரின் அறிவிப்பு
இலங்கை மின்சார சபையின் எந்தவொரு தனிநபரின் பதவி விலகலையும் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளுமாறும், இலங்கை மின்சார சபைக்கான அனைத்து நிலுவைத் தொகைகளையும் வசூலிக்குமாறும் மின்சார சபைக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
அந்த பதிவில் மேலும், மின்சார சபை சீர்திருத்தங்கள், செலவுக் குறைப்பு பொறிமுறைகள், உற்பத்தித் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மின் திட்டங்களை செயல்படுத்துதல், டிஜிட்டல் கட்டண தளம் மற்றும் அவுட்சோர்சிங் கட்டண வசூல் மற்றும் மின்சார சபை சேவைகளுக்கு இடையூறு விளைவித்த தனிநபர்களுக்கு எதிராக சட்ட ஒழுங்கை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
I have instructed CEB management to accept resignations of any individual without hesitation and to recover all dues to CEB.
— Kanchana Wijesekera (@kanchana_wij) January 22, 2024
I have also instructed the relevant officials to expedite work related to CEB reforms, cost reduction mechanisms, implementing identified power projects… pic.twitter.com/x3VQfN7Sb4
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |