அப்பாவி மக்களை வீதியில் இறக்கி அவர்களை அழிப்பாதையில் இட்டுச் செல்ல வேண்டாம் - ஜோன்ஸ்டன்
அறிவுடைய எவரும் தற்பொழுது வீதியில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட மாட்டாளர்கள் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
களனி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிக்கையில்,
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அறிவார்ந்த எவரும் அரசாங்கத்திற்கு எதிராக போராட மாட்டார்கள்.
அவ்வாறு போராடுபவர்கள் கட்சிகளின் சார்பில் போராடுபவர்கள். அரசாங்கத்திற்கு எதிராக இவ்வாறு போராடுவோர் சபிக்கப்பட வேண்டும்
சில கட்சிகளைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். கோவிட்டை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வரும் வேளையில் இவ்வாறு செயற்படுவது நியாயமில்லை.
அப்பாவி மக்களை வீதியில் இறக்கி அவர்களை அழிப்பாதையில் இட்டுச் செல்ல வேண்டாம்.
அறிவார்ந்த எந்தவொரு கட்சித் தலைவரும் தற்பொழுது நாட்டில் போராட்டங்களை நடத்த உதவ மாட்டார்கள் என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.