இந்திய வம்சாவளி சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட வரலாற்று அநீதி: அமைச்சர் ஜீவன் தொண்டமான்
இலங்கையின் ஒவ்வொரு இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்தின் உரிமைகளையும் கௌரவத்தையும் மீட்டெடுப்பதற்கு இலங்கையும் இந்தியாவும் பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் நிலையைத் தீர்ப்பதற்காக இந்தியா-இலங்கை ஒப்பந்தங்களில் (1964 சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் 1974 சிறிமா-காந்தி ஒப்பந்தம்) இந்தியா கையெழுத்திட்டு அரை நூற்றாண்டு கடந்தாலும், இந்திய அரசாங்கம் இன்னும் ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றவில்லை என சென்னை மேல் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.
இது தொடர்பில் இன்று (5.12.2023) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர் சமூகம் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள அநீதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த சென்னை மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
வரலாற்று அநீதி
150 வருடங்களுக்கும் மேலாக இலங்கையை வளப்படுத்திய இந்திய வம்சாவளி மக்களை சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் கட்டாயத் திருப்பியனுப்பியது, சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட வரலாற்று அநீதியை எதிரொலிக்கும் ஒரு அப்பட்டமான நினைவூட்டலாக உள்ளது என்று ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி சமூகம் தங்கள் தாயகத்திலிருந்து பிரிந்து, ஏறக்குறைய 50 ஆண்டுகளாக இலங்கைக் குடியுரிமையை மறுக்கப்பட்டு வந்தது.
இந்தியக் குடியுரிமை இல்லாமல் இருண்ட நிலையில், பல தசாப்தங்களாக நாடற்ற தன்மையை அனுபவித்து வந்தது. இலங்கையில் இறுதியாக 2009 இல் குடியுரிமைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட போதிலும், இது அவர்களின் அடிப்படை உரிமைகள், அடையாளம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான அணுகலை ஆழமாகப் பாதித்துள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெருந்தோட்ட சமூகத்தை ஒருங்கிணைப்பதற்கான குழுவானது, பெருந்தோட்ட சமூகத்தை இலங்கை சமூகத்துடன் முழுமையாக ஒருங்கிணைப்பதற்கான நடைமுறை தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாக தொண்டமான் தெரிவித்துள்ளார்.
![விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு நேர்மையான தலைவர்: சர்ச்சையை ஏற்படுத்திய காணொளிக்கு கமால் குணரத்ன பதிலடி](https://cdn.ibcstack.com/article/db3ed94b-2469-4b95-9235-303e7b956305/23-656f248086d3f-sm.webp)
விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு நேர்மையான தலைவர்: சர்ச்சையை ஏற்படுத்திய காணொளிக்கு கமால் குணரத்ன பதிலடி
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)