பொருட்களின் விலை குறையும்! அமைச்சர் தகவல்-செய்திகளின் தொகுப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை தவணை முறையில் பெறப்படும் எனவும், அந்த தொகை கிடைத்தவுடன் இலங்கையில் டொலரின் பெறுமதி குறைவடையும் எனவும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு முதல் கடன் தவணை கிடைக்கும் எனவும், பணம் கிடைத்தவுடன் இலங்கையில் டொலரின் பெறுமதி குறையும். அத்துடன், அதிகரித்துள்ள பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாவலப்பிட்டி நகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாவலப்பிட்டி நகரசபையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே மகிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.