மதுபாவனை குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!
“சட்டரீதியாக தயாரிக்கப்படும் மதுபாவனை குறைவடைந்துள்ளமை தொடர்பில் ஆராயப்பட வேண்டும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (01.05.2023) கம்பஹா - ஊராப்பொல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பண்டிகை காலத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் மது விற்பனையுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 450 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மது விற்பனை வீழ்ச்சி
கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் சட்டவிரோத மதுபாவனையின் ஊடாக சட்டரீதியாக தயாரிக்கப்படும் மது விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதா? என்பது தொடர்பில் ஆராய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.