மனைவியுடன் சண்டை-மூன்று மாதங்கள் மது அருந்திய நபர் மரணம் (Video)
மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தொடர்ந்தும் மூன்று மாதங்கள் மதுபானம் அருந்திய நபர் உயிரிழந்த சம்பவம் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நடந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபரின் சடலம் திஸ்ஸமஹாராம டிக்கிரி உயன பிரதேசத்தில் வாழைத்தோட்டம் ஒன்றில் கிடந்த நிலையில் நேற்று முன்தினம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரலிஹெல குடா கம்மான பகுதியை சேர்ந்த 49 வயதான லியன கங்கானம்கே லீலாரத்ன என்ற நபரே உயிரிழந்துள்ளார். உடலை அவரது மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.

அதிகளவில் மதுபானம் அருந்தியதால், சிறுநீரகங்கள் கரைந்து,அல்கஹோல் சிரோசிஸ் நிலைமை ஏற்பட்டதன் காரணமாக குருதியில் சக்கரை அளவு குறைந்து மயங்கி விழுந்ததால், இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என திஸ்ஸமஹாராம திடீர் மரண பரிசோதகர் கே.ஜே.சீ.நெரஞ்சன் தெரிவித்துள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இந்த நபர் மூன்று மாதங்கள் தினமும் நாள் முழுவதும் மது அருந்தியவாறு தனக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் தங்கி இருந்தாகவும் நீண்டகாலம் வீட்டுக்கு வெளியில் இருந்து வந்தாகவும் மனைவி கூறியுள்ளார்.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri