தேசிய நிகழ்ச்சி திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ள அமைச்சர் டக்ளஸ்
நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட மருதங்கேணி பிரதேச செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் (Douglas Devananda) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (21.04.2024) மாவட்ட அரச அதிபர் பிரதீபனின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
போசாக்கு மட்டம்
2023ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 25 மாவட்டங்களில் சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட 2.74 மில்லியன் குடும்பங்களை உள்ளடக்கியதாக, ஒரு குடும்பத்திற்காக 10 கிலோக்கிராம் நாட்டரிசியை இரண்டு மாதங்களுக்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்ட குறைந்த வருமானங் கொண்டவர்களின் போசாக்கு மட்டத்தைப் பேணுவதற்கு ஏதுவாக இந்த வாண்டிலும் குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த வேலைத்திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இதனடிப்படையிலேயே இன்றையதினம் யாழ் மாவட்டத்தில் சம்பிரதாயபூர்வமாக அமைச்சரால் அரிசி வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
