வேலணை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காசோலைகள் வழங்கி வைப்பு (Photos)
கடற்பாசிகளுக்கு சர்வதேச சந்தையில் நல்ல வருவேற்பு காணப்படுவதனால், பகுதி நேரமாக கடல்பாசி செய்கையில் ஈடுபடுவதன் மூலம் சராசரியாக வருடத்திற்கு 4 இலட்சம் ரூபாய் வருமானமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்துறை பிரதேசத்தில் 25 பயனாளர்களும் வேலணையை சேர்ந்த 10 பயனாளர்களும் தெரிவு செய்யப்பட்ட நிலையில், முதற் கட்டமாக ஒரு பகுதியினருக்கு இன்று காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,
அதனடிப்படையில் கடலட்டை வளர்ப்பிற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தலா சுமார் 5 இலட்சம் வரையிலும், கொடுவா மீன் மற்றும் பாசி வளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு முறையே 2 இலட்சத்து 50 ஆயிரம், ஒரு இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளன.
மேலும், கடல் பாசி செய்கையில் முதலீடு செய்வதற்கு தனியார் முதலீட்டாளர்களும் ஆர்வம் செலுத்துவதுடன் வேலணை மற்றும் ஊர்காவற்துறை பிரதேசத்தில் பொருத்தமான இடங்களும் பெருமளவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையினால், பாசி வளர்ப்பில் ஈடுபடுவதற்கு மக்கள் ஆர்வம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.






உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
