ரணிலிடம் தமிழ் எம்பிக்கள் நிதி கோரல்: போட்டு உடைத்த டக்ளஸ்

Douglas Devananda Ranil Wickremesinghe Sri Lanka
By Kajinthan Feb 16, 2024 11:21 PM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கி தருமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்ட முன்மொழிவுகள் உள்ளடக்கிய கோரிக்கையை அனுப்பியுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்ததாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம்(16.02.2024) மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடல் இடம்பெற்றது.

கொழும்பில் 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய மூவர் கைது

கொழும்பில் 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய மூவர் கைது

நிதி ஒதுக்கீடு

இதன்போது இவ்வருடம் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் உள்ள ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் திட்டங்களை எவ்வாறு தயாரித்து நிறைவு செய்தீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கேள்வி எழுப்பிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை பார்த்து நீங்கள் ஜனாதிபதியிடம் அபிவிருத்தி நிதி கேட்கவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரணிலிடம் தமிழ் எம்பிக்கள் நிதி கோரல்: போட்டு உடைத்த டக்ளஸ் | Minister Douglas Development Committee Meeting

பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், நான் ஜனாதிபதிக்கு நேரடியாக கடிதம் அனுப்பவில்லை யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு திட்டங்கள் தொடர்பாகக் கடிதம் அனுப்பினேன் அவர் அனுப்பி விட்டதாக எனக்கு தெரியப்படுத்தினார் என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சுற்றறிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் விருப்புக்கேற்ப அபிவிருத்தி திட்டங்கள் முன்மொழியப்பட்டு தெரிவுகள் திரட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச அபிவிருத்திக் கலந்துரையாடலில் தமது பிரதிநிதிகளை அனுப்பிவிட்டு தற்போது திட்டங்கள் தொடர்பில் தம்முடன் கலந்துரையாடவில்லை என கூற முடியாது.

ரணிலிடம் தமிழ் எம்பிக்கள் நிதி கோரல்: போட்டு உடைத்த டக்ளஸ் | Minister Douglas Development Committee Meeting

மேலும் கடந்த மூன்று வருடங்களாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படடாத நிலை இருந்தபோதும் இம்முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாண மாவட்டத்திற்கென 322 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.

ஆனாலும் இந்த நிதி மிக சொற்பமானதாகவே உள்ளது.அதாவது சிறு விடயங்களை மேற்கொள்வதற்கான நிதியாகவே உள்ளது. அதற்கிணங்கவே இம்முறை பிரதேச செயலகங்களால் கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு அப்பிரதேச மக்களின் நேரடி தெரிவுகளாக திட்டங்களும் முன்மொழிவுகளும் திரட்டப்பட்டுள்ளது.

அபிவிருத்திக்கான நிதி

மேலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஜனாதிபதியுடன் நேரடியாக தொடர்புகளை பேணி வருபவர்கள் அவர்கள் நேரடியாக ஜனாதிபதியிடம் அபிவிருத்திக்காக நிதி கேட்டுள்ளார்கள் அவர்களின் தனிப்பட்ட ஒதுக்கீட்டில் நான் தலையிடப் போவதில்லை” என்றார்.

இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன், “பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடல்களுக்கு முதல் நாள் எமக்கு அறிவிக்கப்படுகிறது. சுற்று நிருபத்தின் பிரகாரம் 14 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது.

ரணிலிடம் தமிழ் எம்பிக்கள் நிதி கோரல்: போட்டு உடைத்த டக்ளஸ் | Minister Douglas Development Committee Meeting

ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்முறை எல்லாம் மாற்றமாகவே இடம்பெருகிறது. மாவட்ட அபிவிருத்தி குழு நிர்வாக விடையங்களுக்கு அரச அதிபர் தான் பொறுப்பு என்றால் கூட்ட ஒழுங்கு தெரிந்திருக்க வேண்டுமென கூறியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உங்கள் அபிவிருத்தி முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்காக ஒரு வார கால அவகாசத்தை என்னால் வழங்க முடியும் ஆனால் ஜனாதிபதி செயலகத்துடன் பேசிய பின்னரே உறுதியாக கூற முடியும் என தெரிவித்துள்ளார்.

ரணிலிடம் தமிழ் எம்பிக்கள் நிதி கோரல்: போட்டு உடைத்த டக்ளஸ் | Minister Douglas Development Committee Meeting

இதையடுத்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அபிவிருத்தி குழு தலைவர் நீங்கள் நீங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தால் ஜனாதிபதி செயலகம் ஏற்றுக்கொள்ளும் ஆகையால் நல்ல ஒரு தீர்மானத்தை எடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளையும் உள்ளடக்கி அனுப்புங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது மீண்டும் ஞாபகப்படுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீங்கள் எல்லோரும் ஜனாதிபதியுடன் நல்ல உறவில் இருக்கிறீர்கள் இயன்றவரை நிதிகளைப் பெற்று அபிவிருத்திகளை செயல்படுத்துங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரணிலிடம் தமிழ் எம்பிக்கள் நிதி கோரல்: போட்டு உடைத்த டக்ளஸ் | Minister Douglas Development Committee Meeting

குறித்த கூட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் எம்.பிக்கள் புத்திஜீவிகளுடன் இரவோடு இரவாக இந்தியா நடத்திய அவசர சந்திப்பு

யாழில் எம்.பிக்கள் புத்திஜீவிகளுடன் இரவோடு இரவாக இந்தியா நடத்திய அவசர சந்திப்பு

மட்டக்களப்பு - தன்னாமுனை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: மூவர் படுகாயம்

மட்டக்களப்பு - தன்னாமுனை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: மூவர் படுகாயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US