யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பதற்றம் - அடியாட்களால் எழுந்த சர்ச்சை

Jaffna Gajendrakumar Ponnambalam Sri Lanka Dr.Archuna Chavakachcheri
By Rakesh Jun 22, 2026 11:36 AM GMT
Report

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகர் அழைத்து வந்த அடியாட்கள் அச்சுறுத்தும் வகையிலான  செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை(19.06.2026) யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற குழப்பம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்

அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டவர்கள்

அவர் மேலும் தெரிவிகக்கையில்,

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு தரமுயர்த்துவது தொடர்பான விவகாரத்திலும், தையிட்டி விகாரை காணி விடயம் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது கருத்துக்களை முன்வைத்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குழப்பமடைந்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை உரையாட விடாமல் தடுத்து தொடர்ச்சியாக குழப்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசினுடைய தேவையை நிறைவு செய்வதற்காகவே அர்ச்சுனா இராமநாதனை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பயன்படுத்திக் கொண்டார்.

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பதற்றம் - அடியாட்களால் எழுந்த சர்ச்சை | Minister Chandrasekar S Aides Disrupt Jaffna Meet

எனினும் அந்த விடயங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உறுதியாக நின்று மக்களுடைய காணிகளைச் சுவீகரிக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்த போது, பொதுமக்கள் அரங்கில் இருந்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எழுந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எதிராகக் கூச்சலிடத் தொடங்கினார்கள்.

அவர்கள் அமைச்சர் சந்திரசேகர் அழைத்து வந்த தேசிய மக்கள் சக்தியின் அடியாட்கள். கிராமங்களிலே அடிதடி, வன்முறைகளில் ஈடுபடுகின்ற நபர்களே காடைத்தனமாகக் கூக்குரலிடுகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

குறிப்பாக வடமராட்சி தென்மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையினுடைய தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எவ்வாறு அந்தக் கூட்டத்துக்கு வந்தார் என்பது தெரியாது.

நண்பருடன் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த துயரம் - ஒருவர் மாயம்

நண்பருடன் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த துயரம் - ஒருவர் மாயம்

காணொளி எடுத்து அச்சுறுத்தியமை

அவர் அமைச்சர் சந்திரசேகருடைய அடியாளாகவே கலந்துகொண்டிருந்தார்.

அவர் அங்கு கருத்துச் சொல்கின்றவர்களைக் காணொளி எடுத்து அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

அது மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினுடைய பிரதிநிதியாக நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துச் சொல்ல முற்பட்டபோது எனக்கு முன்னால் வந்து நின்று என்னை சபை நடவடிக்கைகளைப் பார்க்க விடாமல் தடுத்துக்கொண்டு காணொளி எடுத்து அச்சுறுத்திக் கொண்டிருந்தார்.

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பதற்றம் - அடியாட்களால் எழுந்த சர்ச்சை | Minister Chandrasekar S Aides Disrupt Jaffna Meet

இதற்கு முன்னர் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றதில்லை. மக்கள் மத்தியில் எங்களுடைய கருத்துக்களை செல்வது குறித்து தேசிய மக்கள் சக்தி அரசு அச்சப்படுகின்றது.

தங்களுடைய இனவாத முகம் அம்பலப்படுவதை தடுப்பதற்கும் கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதற்கும், ஊடக சுதந்திரத்தை முடக்குவதற்கும், அங்கே வருகின்ற மக்கள் தமது பிரச்சினைகளைக் கூறவிடாமல் அச்சுறுத்துகின்ற செயற்பாடுகளைச் சந்திரசேகர் தலைமையிலான இந்தத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இங்கே அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

காலக்கெடு எதுவும் விடுக்கப்படவில்லை.. இலங்கை கிரிக்கெட் தொடர்பில் வெளியான தகவல் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

காலக்கெடு எதுவும் விடுக்கப்படவில்லை.. இலங்கை கிரிக்கெட் தொடர்பில் வெளியான தகவல் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், நியூன்ராடே, டார்ட்மண்ட், Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US