நானுஓயா தொடருந்து நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் பிமல்
நுவரெலியாவிற்கு வருகை தந்த போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நானுஓயா தொடருந்து நிலையத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயம் நேற்று வியாழக்கிழமை(14.08.2025) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, கிருஷ்ணன் கலைச்செல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உட்பட நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகள் உடனிருந்தனர்.
பணியாளர்களின் பிரச்சினைகள்
குறிப்பாக நானுஓயா தொடருந்து நிலைய பகுதியினை பார்வையிட்ட அமைச்சர், தொடருந்து நிலைய பிரதான அதிபர் உட்பட தொடருந்து நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, மேற்கொள்ளப்பட வேண்டிய, திருத்தப் பணிகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

மேலும், அங்குள்ள குறை நிறைகளை பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, தற்போது தொடருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீனமயப்படுத்தும் செயற்பாடுகள் குறித்தும் வேலைத்திட்டங்கள் குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், தொடருந்து நிலையத்தில் காணப்படும் பணியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொடருந்தில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வாகன சாரதிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சரிடம் விவரிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 1 மணி நேரம் முன்
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri