அமெரிக்கா சென்றார் அமைச்சர் பசில்!
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை அவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் ஒரு மாத காலம் அவர் அமெரிக்காவில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அமெரிக்கா செல்வதற்கு முன்னர் நிதியமைச்சர் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அலரிமாளிகைக்கு அழைத்து விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதனிடையே, வரவு செலவுத்திட்டம் இறுதி செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ள நிலையில், ஜனவரி 18 ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.
இதேவேளை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனிப்பட்ட விஜயமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.