இந்தியா செல்லும் அமைச்சர் பசில் ராஜபக்ச
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள தயாராகி வருகிறார். இந்த மாத இறுதியில் அவர் இந்தியாவுக்கு பயணம் செய்ய உள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர், நிதியமைச்சர், இந்தியாவுக்கு விஜயம் செய்வது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளார்.
முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தியா, இலங்கைக்கு உதவும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளது.
இதற்கு முன்னரும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். உணவு மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்ய இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர்களை வழங்க அவரது இந்த விஜயத்தின் போதே இந்தியா தீர்மானித்தது.