இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சரை சந்தித்த அமைச்சர் பசில் (Photos)
இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa), இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri) மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் குமார தோவால் (Shri Ajit Kumar Doval) ஆகியோரை சந்தித்து இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
புது டெல்லியில் நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒருங்கிணைந்த தந்திரோபய வழிமுறைகளின் தேவைகள் சம்பந்தப்பட்ட பல விடயங்கள் பற்றி கலந்துரையாட்பட்டுள்ளதாகவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்தியா மற்றும் இலங்கை இடையில் பலவேறு துறைசார்ந்த இருத்தரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பான எதிர்கால நோக்கு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது எனவும் உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி 90 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் உயர் அதிகாரியாக கடமையாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
