துபாய் சென்றுள்ள அமைச்சர் பந்துல
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) துபாய் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்துவது இந்த விஜயத்தின் நோக்கம் என்பதுடன் அமைச்சர் பந்துவ குணவர்தன, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் சர்வதேச வர்த்தக அமைச்சர் கலாநிதி தானி பின் அஹமத் அல் சேய்தியை சந்திக்க உள்ளார்.
அத்துடன் துபாய் கண்காட்சி மத்திய நிலையத்தில் இன்று 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடைபெறும் இலங்கை ஏற்றுமதி சம்பந்தமாக கண்காட்சியை அமைச்சர் பந்துல குணவர்தன ஆரம்பித்து வைக்க உள்ளார்.
இதனை தவிர துபாய் ஏக்ஸ்போ கண்காட்சியையும் அமைச்சர் பார்வையிடவுள்ளார்.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri