பாகிஸ்தான் பிரதமரை சந்திக்கும் அமைச்சர் பந்துல:காரணம் என்ன?
பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் அப்துல் ராசக் தாவூத்தின்(Abdul Razak Dawood) அழைப்பின் பேரில் இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன,(Bandula Gunawardane) பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் பந்துலவின் இந்த விஜயம் அமைந்துள்ளது.
அமைச்சருடன் பிராந்திய ஒத்துழைப்புக்கான ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, (Tharaka Balasooriya) வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், வர்த்தக அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையின் முன்னணி வர்த்தகர்களும் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.
அமைச்சர் பந்துல குணவர்தன உட்பட தூதுக்குழுவினர், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் பிரதமர் இம்ரான் கானை (Imran Khan) சந்தித்து இருத்தரப்பு வர்த்தக தொடர்புகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
அத்துடன் பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் அப்துல் ரசாக் தாவூத் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் இவர்கள் சந்திக்க உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தைகளில் இலங்கையின் ஏற்றுமதி துறையினர் பாகிஸ்தான் சந்தையில் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வது குறித்தும், இருத்தரப்பு வர்த்தக தொடர்புகளில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்துவது எனவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர பாகிஸ்தான் வர்த்தக சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. இலங்கையின் வர்த்தகர்களின் உற்பத்திகளை பாகிஸ்தான் மக்கள் மத்தியில் பிரலப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.