அமைச்சர் பந்துலவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த நபர்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் அமைச்சரின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதிமன்றம், குற்ற விசாரணைப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.

கடன் அட்டை மோசடி
அமைச்சருக்கு சொந்தமான கடன் அட்டையை பயன்படுத்தி மோசடியான முறையில் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்து இலட்சம் ரூபா கடன் உச்ச வரம்பினைக் கொண்ட இலங்கை வங்கிக் கடன் அட்டை ஒன்றைப் பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளதுடன்,சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோசடியான முறையில் கடன் அட்டையை பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam