பொலிஸ் அதிகாரியின் இடமாற்றம் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமைச்சர்
போதைப்பொருள் மீட்பில் முக்கிய பங்கு வகித்த ஒரு பொலிஸ் அதிகாரி, உளவுத்துறை அறிக்கையின் பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு துணை அமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) குற்றம் சுமத்தியுள்ளார்.
மகரகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய குறித்த பொலிஸ் அதிகாரி, போதைப்பொருள் கடத்தல்காரருடன் சட்டவிரோத தொடர்பு வைத்திருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையில் அந்த அதிகாரி முல்லைத்தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தின் மீது தவறு
எனினும், இந்த இடமாற்றம் குறித்து விசாரிக்க கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் அமைச்சகத்திற்கு வந்த தம்மிடம் நிலைமைகளை விளக்கியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பொலிஸ் தரப்பு தங்கள் கடமைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், பொலிஸ் திணைக்களத்தின் மீது தவறு காண விரும்பவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)