கனேடிய பொது தேர்தல் களம்: அனிதா ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு
லிபரல் கட்சியை தலைமை பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொது தேர்தலிலும் தாம் போட்டியிட போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அனிதா, போக்குவரத்து மற்றும் உள்ளக வர்த்தக விவகார அமைச்சராக கடமையாற்றி வருகின்றார்.
அவர் தனது சமூக ஊடக கணக்குகளில் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
அரசியல் ஈடுபாடு
அனிதா ஆனந்த் ஓர் சட்டத்தரணி என்பதுடன் சட்டப்பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக அவர் சட்டத்துறை பேராசிரியராக கடமையாற்றி இருந்தார்.
அனிதா ஆனந்த், பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் ஆட்சியில் பல்வேறு முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வெளிவகார அமைச்சர் மெலனி ஜோலி, நிதி அமைச்சர் டொமினக் லீப்பிளாங்க் ஆகியோரும் கட்சி தலைமை பதவிக்காக போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |