பசிலுக்கு எதிரான இரகசிய நகர்வுகள் ஆரம்பம்! விரைவில் சிக்கலாம்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) தொடர்பான விசாரணைகள் தற்போது மிகவும் இரகசியமான முறையில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பஷில் ராஜபக்சவின் சொத்துக்கள், அவற்றை முதலீடு செய்துள்ள இடங்கள், சேமிப்புகள், வீடு உள்ளிட்ட அசையாச் சொத்துக்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் மிகத் தீவிரமாக தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடயங்களை அறிந்து கொண்ட அநுர
அதன் ஒருகட்டமாக பசில் ராஜபக்சவுடன் கடந்த காலங்களில் நெருக்கமாக செயற்பட்ட வர்த்தகத் துறையினர், முக்கிய அதிகாரிகள் போன்றோரிடம் அண்மைக்காலமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில் சர்வதேச பிடியாணை பெறக்கூடிய வகையில் மிக விரைவில் பசில் ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுப்பதற்கான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் சட்ட மா அதிபருடனான சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த விடயம் குறித்து முக்கியமாக கேட்டறிந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே எந்தவொரு விசாரணைக்காகவும் இலங்கைக்குத் தான் வரப்போவதில்லை என்று பசில் ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 12 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        