சட்டவிரோதமாக கொள்கலன் பொருட்களை விடுவிக்க உத்தரவிடும் அமைச்சர் ! வெளியான ஆதாரம்
சட்டவிரோதமான முறையில் கொள்கலன்களில் கொண்டு வரப்பட்ட பொருட்களை விடுவிக்க ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் முயற்சித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வருண ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அவரது சமூக ஊடகத்தில் இது தொடர்பிலான குரல் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பொருட்களை சட்டவிரோதமான முறையில் விடுவிப்பதற்கு ஆளும் கட்சி அமைச்சர் ஓருவர் தலையீடு செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பிலான தொலைபேசி உரையடல் அடங்கிய குரல் பதிவொன்றும் சமூக ஊடகத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளது.
அனுமதிப்பத்திரம் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட குறித்த பொருட்களை சுங்கக் கட்டணங்களைக் கூட செலுத்தாது விடுவிப்பது தொடர்பில் அறிவுறுத்தல் விடுக்கப்படும் தகவல்கள் இந்த குரல் பதிவில் காணப்படுகின்றது.
இந்த குரல் பதிவில் அமைச்சர் ஒருவர் பேசியிருந்தால் அவரை பணி நீக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வருண ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இந்த குற்றச்சாட்டு குறித்து அரசாங்கத் தரப்பில் எவ்வித பதில்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.