இன்று அதிகாலை வானிலையில் ஏற்பட்ட மாற்றம் - வெளியான வரைபடம்
இன்று (17) காலை நாட்டில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.0 டிகிரி செல்சியஸாக நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை
இதன்படி, பண்டாரவளை பகுதியில் இன்று காலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 11.6 டிகிரி செல்சியஸாகவும், பதுளையில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 14.4 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது.

இதற்கிடையில், பொலன்னறுவை பகுதியில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு மையங்களிலிருந்து பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச வெப்பநிலை அளவீடுகள் வரைபடத்தில் டிகிரி செல்சியஸில் காட்டப்பட்டுள்ளன.
பனிமூட்டமான சூழ்நிலை
இதற்கிடையில், நாட்டின் பல பகுதிகளில் இன்று (17) வறண்ட வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

மேலும், அதிகாலை நேரங்களில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் பனிமூட்டமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.