முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான வயது வரம்பு! அரசாங்கத்தின் முடிவு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆண்டுகளாக உயர்த்துவதற்கான முன்மொழிவை அரசாங்கம் இன்னும் பரிசீலிக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (25.08.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சமீபத்தில், முச்சக்கரவண்டிகள் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் நளிந்த கூறுகையில், பாடசாலை படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் அல்லது கபொத உயர்தரம் முடித்தவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பது தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பல முன்மொழிவுகள் வந்துள்ளன.

தொழிற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகள்
ஆனால் இது தொடர்பான இறுதி முடிவு அரசாங்கத்தால் எடுக்கப்படும். பாடசாலை படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், கபொத உயர்தர தேர்வுக்குப் பிறகு படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மற்றும் சில குறிப்பிட்ட குழுவினருக்கு தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழங்குவது தொடர்பாக பல்வேறு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
அந்த முன்மொழிவுகளில் சில செயல்படுத்தப்பட்டு வருகின்றன, ஆனால் அரசாங்கம் குறிப்பிட்ட அந்த முன்மொழிவை இன்னும் பரிசீலிக்கவில்லை.
பல்வேறு முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் இந்தத் திட்டங்களில் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கலாம், ஆனால் இறுதியில் என்ன செய்வதென்று அரசாங்கமே முடிவு செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்