மன்னாரில் பல பில்லியன்களை இலக்கு வைத்து ஆய்விற்கு களமிறங்கும் பிரித்தானியா
மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் காணப்படும் பல பில்லியன்கள் பெறுமதியான கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பிரபல ஆய்வு நிறுவனமொன்று களமிறங்கியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த ஆய்வுகளுக்காக முதற்தடவையாக விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பிரபல ஆய்வு நிறுவனத்தின் ஊடாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் கனிய எண்ணெய் காணப்படக்கூடிய பகுதிகள் 20ஆக பிரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒரு பகுதியை தனியார் நிறுவனமொன்று நீண்டகாலம் ஆய்வு செய்வதாகவும், அதற்காக அதிக பணம் செலவிடப்படுவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த 20 பெரும்பகுதிகளையும் 837 அலகாக பிரித்து புதிய வரைபடத்தை தயாரித்துள்ள நிலையில் புதிய வரைப்படத்திற்கு அமைய தரவுகளை சேகரிப்பதற்காக விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 50 வீதத்தை வழங்கினாலும் 133.5 பில்லியன் டொலர் அரசிற்கு கிடைக்கும் எனவும், அது நாட்டின் மொத்த கடன் தொகையான 47 பில்லியன் டொலரை விட மூன்று மடங்காகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்தி...
இலங்கை கடற்பரப்பில் இருக்கும் பொக்கிஷம்! - அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையின் முழு கடனையும் அடைக்க இதுவே ஒரே வழி! - அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri