விமான நிலையத்தில் மீண்டும் சிக்கிய கோடிக்கணக்கான பணம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டுபாய்க்கு வெளிநாட்டு நாணயங்களை கொண்டு செல்ல முற்பட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வெளிநாட்டு நாணயங்கள் சுங்க பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது விமான நிலையத்தில் குறித்த இருவரும் சிக்கியுள்ளனர். அவர்களது பயணப் பைகளில் 46,000 யூரோக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்கள் கடத்த முற்பட்ட வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.