பால்மா விலை அதிகரிக்கப்படுகிறதா? நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் தகவல்

Price Increase Import Lasantha Alagiyawanna Milk Powder
By Mayuri Sep 21, 2021 01:42 AM GMT
Report

ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் கொள்கையளவில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.

இருந்த போதும் பால்மாவுக்கான விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவிலேயே தீர்மானிக்கப்படும்.

உலக சந்தையில் பால்மா விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதிக்குமாறு பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கடந்த ஒரு மாத காலமாக கோரி வருகின்றன.

விலை அதிகரிக்க அனுமதிக்கப்படாதமையால் அவர்கள் தற்போது இறக்குமதியை மட்டுப்படுத்தி இருக்கின்றனர். அதனால் சந்தையில் கடந்த சில வாரங்களாக பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

இந்த பின்னணியில் பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் (Basil Rajapaksa) இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது உலக சந்தையில் பால்மா விலை அதிகரிக்கப்பட்டிருப்பது, கப்பல் கட்டணம் அதிகரித்திருப்பது, ரூபாவுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி அதிகரித்திருப்பது போன்ற காரணங்களுக்கமைய ஒரு கிலோகிராம் பால்வின் விலையை 350 ரூபா வரை அதிகரிப்பதற்கு அனுமதி கோரியுள்ளனர்.

என்றாலும் சந்தை நிலைமை மற்றும் இறக்குமதி வரி தொடர்பில் நீண்ட கலந்துரையாடலின் பின் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் கொள்கையளவில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இருந்தபோதும் பால்மாவுக்கான விலை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை இதுவரை அனுமதி வழங்கவில்லை.

எதிர்வரும் வாரத்தில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு இது தொடர்பாக கலந்துரையாடிய பின்னரே விலை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்தி...

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பு 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US