இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை உயர்வுக்கு ஒப்புதல் வழங்க முடியாது - பந்துல
இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை உயர்வுக்கு ஒப்புதல் வழங்க முடியாது வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மீது மேலும் சுமையை அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, முன்னணி பால் மா இறக்குமதியாளர்கள், உலக சந்தையில் விலை அதிகரிப்பு, ரூபாவின் தேய்மானம், பரிமாற்ற செலவு ஆகியவற்றை காரணம் காட்டி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டுக்கு 350 ரூபாவை அதிகரிக்க அனுமதியை கோரியிருந்தனர்.
இல்லையேல் உள்ளூர் சந்தையில் பால் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்திருந்தனர்.
இருப்பினும், கோவிட் தொற்றுநோய் காரணமாக அனைவரும் சிரமங்களைத் தாங்க வேண்டியுள்ளது.
எனவே, சமூகத்தின் நன்மைக்காக இந்த நேரத்தில் பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டாம் என அமைச்சர் பால் மா இறக்குமதியாளர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.