வவுனியாவில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வீட்டுக்கு இராணுவ பாதுகாப்பு (Photos)

Sri Lanka Army Vavuniya SL Protest
By Thileepan May 10, 2022 03:42 PM GMT
Report

வவுனியாவில் வசிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆகியோரது வீடுகளுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் நேற்றைய தினம் (09) அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது கொழும்பில் மேற்கொண்ட தாக்குதலையடுத்து நாடு பூராகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும், அமைச்சர்கள் மற்றும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் வன்முறைகள் ஏற்பட்டதுடன், பலரது வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள் இரவிரவாக தீயிட்டு எரிக்கப்பட்டன.

வவுனியாவில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வீட்டுக்கு இராணுவ பாதுகாப்பு (Photos) | Military Security Home Former Minister Vavuniya

இதனையடுத்து வவுனியாவில் வசித்து வரும் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த முன்னாள் கிராமிய அபிவிருத்தி மற்றும் பயிர்செய்கை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் ஈபிடிபியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் ஆகிய இருவரதும் வீடுகள் மற்றும் அவர்களது அலுவலகங்கள் என்பவற்றுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மேலதிகமாக, இரவிரவாக இராணுவவத்தினர் கடமையில ஈடுபடுத்தப்பட்டு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் 561 ஆவது படைப் பிரிவினர் குறித்த இருவரதும் வீடுகள் மற்றும் அலுவலங்களுக்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனடிப்படையில், வவுனியா நகரப்பகுதி மற்றும் பிரதான வீதிகளில் பொலிஸாரால் வீதியால் செல்பவர்கள் வழிமறிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், தேவையற்ற விதமாக நடமாடுபவர்கள் எச்சரிக்கப்பட்டு மீண்டும் வீடுகளளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US