தமிழர் பகுதியில் திடீரென அமைக்கப்பட்ட இராணுவ வீதி தடை : அச்சத்தில் மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திடீரென வீதியில் இராணுவத்தினர் வீதி தடையை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முல்லைதீவு, புதுக்குடியிருப்பு வீதியில் இராணுவத்தினர் வீதி தடையை புதிதாக அமைத்துள்ளனர்.
அதேவேளை புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் செல்லும் வீதியில் 10 கிலோமீட்டருக்கு தொலைவில் உடையார் கட்டு பகுதியில் இன்று இரவு இராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இராணுவத்தினரின் வீதி தடை
கடந்த காலங்களில் கோவிட் மற்றும் குண்டுவெடிப்பு காலங்களில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இராணுவத்தினர் வீதி தடைகளை அமைத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் வீதி தடையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam