சீன தூதுவருக்கு அதியுச்ச இராணுவ பாதுகாப்பு! இந்தியாவுக்கு சொல்லும் செய்தி (Video)
சீனாவினுடைய நடவடிக்கைகளை பொறுத்தமட்டில் அவர்கள் சடுதியாகவும் வேகமாகவும் செயற்படுபவர்கள் அல்லர், அவர்கள் மிக நிதானமாக ஆறுதலாக அவர்களுடைய பயணத்தை மேற்கொள்வார்கள், வரலாற்று ரீதியாக அத்தகைய பண்பாட்டியலை கொண்டவர்கள் அவர்கள் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
“வெளிநாட்டுக் கொள்கை என்றாலும் சரி, வெளிநாட்டு வியூகங்கள் என்றாலும் சரி, வர்த்தகம் என்றாலும் சரி அவர்கள் அடிக்கட்டுமாணம் என்ற போர்வையில் மெல்ல நுழைந்து படிமுறை வளர்ச்சியைக் காட்டுவார்கள்.
அந்த அடிப்படையில் தான் அவர்கள் இலங்கையின் ஹம்பாந்தோட்டையை தெரிவு செய்து, வடக்கிற்கு வராமல் தெற்கிலே நிலைகொண்டு தற்போது வடக்கை நோக்கி வந்திருக்கின்றார்கள” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடடார்.
சீனாவின் இலங்கைக்கான தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ். குடா நாட்டிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விஜயத்தில் பல்வேறுபட்ட செய்திகள் மறைந்தும் வெளிப்படையாகவும் இருக்கின்றன. சீன தூதுவரின் விஜயத்தின் போது வழங்கப்பட்ட பாதுகாப்பு, அவர் செல்லுகின்ற இடமெல்லாம் வட்டமிட்டுச் செல்லும் இராணுவ உலங்கு வானூர்திகள் போன்றவை பல்வேறு தகவல்களை வெளிப்படுத்துகின்றன.
இதனுடைய தார்ப்பரியங்கள் என்ன? சீனாவினுடைய யாழ். குடாநாட்டு விஜயம், குறிப்பாக எந்த விடயத்தை சொல்லியிருக்கின்றன. இந்திய தேசம் இதிலிருந்து இன்னும் கற்றுக் கொள்ள தாமதிக்குமா? அல்லது என்ன முடிவினை நோக்கி நகரும் என்பது குறித்து தெளிவாக விபரிக்கின்றார்.
இது குறித்து அவர் மேலும் விபரிக்கையில்,